திட்டமிடல் பிரிவு
திட்டமிடல் கிளையின் பணிகள்
கல்வித்துறைசார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் வேலைத்திட்டங்களுக்காக வலயத்தின்
வருடாந்த, இடைக்கால, ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தலும், செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வும்
கண்காணித்தலும்.
வலயத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களினதும் வருடாந்த, இடைக்கால மற்றும் ஐந்தாண்டு
திட்டத்தை தயாரித்தல், திட்டமிடல் மற்றும் அமுலாக்குதல் வேலைத்திட்ட வழங்கல்களின்
நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளின்போது ஆலோசனைவழங்குதலும் திட்டத்தை
அங்கீகரித்தலும்.
பாடசாலைகளின் வருடாந்த வரவு செலவு மதிப்பீட்டை அனுமதித்தல்
வலயத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களினதும் பௌதீக, மனிதவளத் தேவைகளை
இனங்காணுதல், கணக்கிடுதல் மற்றும் தேவைகளைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்தல்
வருடாந்த பாடசாலை தொகைமதிப்புச் செயற்பாடுகளை இணைப்புச் செய்தல் தொடர்பாக
மேற்பார்வை செய்தலும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தலும்.
சந்தர்ப்பத்திற்கேற்ப வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படும் வேறு பணிகளை மேற்கொள்ளல்.
வலய உள்ளகக் கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனைகள், முன்மொழிவுகளை முன்வைத்தல ;.
கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMIS) தொடர்பான தரவுகள்,
தகவல்களைச்சேகரித்தல், அவற்றை தற்காலப்படுத்துதல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு
செய்தல்,மற்றும் பகிர்ந்தளித்தல்.
பாடசாலை மேம்பாட்டுச் செயற்திட்ட (EPSI) நடவடிக்கைகளை இணைப்புச் செய்தல்
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தர உள்ளீடுகளினதும் ஏனைய வழங்கல்களினதும் பயன்பாடு தொடர்பாக ஆலோசனை வழங்குதல்.