பாடசாலைகள் வேலைகள் பிரிவு

பிரிவின் பணிகள் சில

1. ஓமந்தை மற்றும் நெடுங்கேணிக் கோட்டப் பாடசாலைகளில் நடைபெறும் அனைத்து வேலை-களையும் மேற்பார்வை செய்தல்.


2. அனைத்து வேலைகளுக்குமான முன்னேற்ற அறிக்கைகள் வழங்கல்.
 மாதாந்த அறிக்கை
 காலாண்டு அறிக்கை
 விசேட அறிக்கை

3. கேள்வி கோரல் விளம்பரம், ஆவணங்களை தயாரித்து, அவை தொடர்பான மேலதிக தரவுகளை பேணல்.


4. பாடசாலைகளில் நடைபெறும் அனைத்து வேலைகளுக்குமான ஒப்பந்தங்களைத் தயாரித்தலும், முகாமை செய்தலும்.


5. பாடசாலை வேலைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகளுக்கு பதிலளித்தல்.

6. வேலை முடிவுறுத்தல் தொடர்பான உறுதிப்படுத்தல், பிடிகாசு விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகளை உரிய காலங்களில் செயற்படுத்தல்.

 

7. வேலைகளுக்கான முற்கொடுப்பனவுகள், பகுதிக் கொடுப்பனவுகள், இறுதிக் கொடுப்பனவுகளுக்கான பற்றுச்சீட்டுகள் தயாரித்தலும் சிபார்சு செய்தலும். (Advance Payment/ Part Payment/ Final Payment)

 

8. மேற்படி கொடுப்பனவுக்கான ஆவணங்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்டவர்களிடம் குறித்த காலத்திற்குள் கையளித்தல்.

9. ஏனைய திணைக்களங்களினூடாக நடைபெறும் வேலைகளைக் கண்காணித்து அவை தொடர்பான முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பித்தல். (மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், மாவட்ட பொறியியல் திணைக்களம் , நீர்ப்பாசனத் திணைக்களம்).

Zonal Education Office,Vavuniya North © 2022