கல்வி அபிவிருத்தி பிரிவு

அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

அழிபொருட் கொள்வனவுகளுக்கான அனுமதி

• குறித்த நிதியாண்டிற்காக அனுமதிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் பிரதி


• பாடசாலை அபிவிருத்திக் குழுக் கூட்ட அறிக்கை


• பாடசாலை அபிவிருத்திக் கணக்கு மீதி விபரம்
(குறித்த காலப்பகுதிக்கான ஒவ்வொரு செயற்பாடுகளுக்குமான நிதி ஒதுக்கீடு)


• கொள்வனவுக் குழு, பெறுகைக்குழுத் தீர்மானக் கூட்ட அறிக்கை

ஆசிரியர் மட்ட செயற்பாடுகளுக்கான அனுமதி

• வலயக் கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மாதிரிக்கமைவாக தயாரிக்கப்பட்ட செயற்றிட்ட வரைவு


• குறித்த ஆண்டுக்கான அனுமதிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் பிரதி.


• குறித்த செயற்பாடுகள் தொடர்பான பாடசாலை வசதிப்படுத்துனரின் சிபார்சுடன் கூடிய அனுமதிக்கான கோரிக்கை கடிதம்


• பாடசாலை அபிவிருத்திக் கணக்கு மீதி விபரம்
(குறித்த காலப்பகுதி வரையான ஒதுக்கீடுகள் மற்றும் பயன்படுத்தப்படாதுள்ள பழைய நிதி ஒதுக்கீடுகள்)

மாணவர் மட்ட செயற்பாடுகளுக்கான அனுமதி

• வலயக் கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ள மாதிரிக்கமைவாக தயாரிக்கப்பட்ட செயற்றிட்ட வரைவு


• குறித்த செயற்பாடுகள் தொடர்பான பாடசாலை வசதிப்படுத்துனரின் சிபார்சுடன் கூடிய அனுமதிக்கான கோரிக்கை கடிதம்


• பாடசாலை அபிவிருத்திக் கணக்கு மீதி விபரம்
(குறித்த காலப்பகுதி வரையான ஒதுக்கீடுகள் மற்றும் பயன்படுத்தப்படாதுள்ள பழைய நிதி ஒதுக்கீடுகள்)

கல்வி அபிவிருத்தி பிரிவின் பணிகள் சில

கீழ் தரப்படும் வகுதிகளின் கல்விக்கொள்கைகள் மற்றும் கலைத்திட்டம் என்பன முறையாக அமுலாக்கப்படுதல் தொடர்பாக பொறுப்பேற்றலும் வகைகூறலும்.
• ஆரம்பக் கல்வி அபிவிருத்தி
• இடைநிலைக் கல்வி அபிவிருத்தி

கல்வித் துறைசார் அபிவிருத்தி வேலைத்திட்ட பிரவேச சட்டகத்தின் (ESDF) அடிப்படையிலான வேலைத்திட்டங்களுக்காக வருடாந்த, இடைக்கால, ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தலும் பிரேரணைகளை முன்வைத்தலும்.

 

கோட்டக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்குதல், மதிப்பீடு செய்தல் மற்றும் கண்காணித்தல்.

அனுமதிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், முன்னேற்ற மீளாய்வு மற்றும் கண்காணித்தல்.,

 

பாடசாலைகளில் ஆரம்ப, இடைநிலைக்கல்விசார் இணைப்பாடவிதான, பாட இணைச் செயற்பாடுகளை ஒழுங்குசெய்வதற்கான வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்.

கலைத்திட்ட நவீனமயமாக்கல்களை அறிமுகப்படுத்துதலும் ௮முலாக்குதலும்.

 

ஓதுக்கப்பட்ட பாடப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் செயற்றிட்ட உத்தியோகத்தர்களின் செயலாற்றுகை முன்னேற்ற மீளாய்வு.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்றிட்ட உதவிகள், தர உள்ளீடுகள் தொடர்பாக கண்காணித்து முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.

 

சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பாட அபிலிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

 

மாணவர் அடைவு மட்ட விருத்திக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

மாணவர் அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்து, அதனால் வெளிப்படுத்தப்படும் தகவல்களின் அடிப்படையில் கல்வியின் பண்புத்தர மேம்பாட்டுக்காக நடவடிக்ககை எடுத்தல்.

 

ஆசிரியர் மற்றும் பணிக்குழுவினரின் கொள்ளாற்றல் விருத்திக்காக (Capacity Development) செயற்பாடுகளை ஒழுங்கமைத்தலும் நடைமுறைப்படுத்துதலும்.

பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மைத்துவ விருத்திச் செயற்பாடுகளை (SBPTD) மேற்கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், இணைப்புச்செயலாற்றுதல்.

 

அரச அல்லது அனுமதிக்கப்பட்ட அரசசார்பற்ற கல்விசார் செயற்றிட்டங்களின் கல்வி விருத்திசார் செயற்பாடுகளினை மேற்கொள்ளுதல், ஒருங்கிணைத்தல், இணைப்புச்செயலாற்றுதல், மீளாய்தல், அறிக்கையிடுதல்.

 

வலய ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தின் (PDCT) செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், வழிகாட்டுதல், கண்காணித்தல்.

வலய கணினி வள நிலையத்தின் (CRC) செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல், வழிகாட்டுதல், கண்காணித்தல்.

வலயத்தின் தொலைக்கல்வி மற்றும் இலத்திரனியல் கல்வி, Blended learning இணைப்பாளராக தொழிற்பட்டு குறித்த முறைமைகளை வலயத்தில் விரிவாக்குதல். தொடர்புடைய நி-றுவனங்களுடன் இணைப்புச் செயலாற்றுதல்.

 

கோட்டக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்குதல், மதிப்பீடு செய்தல் மற்றும் கண்காணித்தல்.

வலய மட்டத்தில் ஆரம்ப, இடைநிலைக்கல்வி பாட ரீதியான போட்டிகளை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும்.

 

பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை அமுலாக்கல், தரச்சுட்டிகளைத்தயாரித்தலும் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு அதற்கிணங்க செயற்படுதலும்.

 

பாடசாலைகளின் உள்ளக மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை கண்காணித்தலும் தேவையான வழிகாட்டல்களை வழங்கலும்.

கல்வி அபிவிருத்திப் பிரிவை உள்ளக மதிப்பீட்டுக்கு உட்படுத்தலும் அறிக்கைப்படுத்துதலும் பின்னூட்டல் வழங்குதலும்.

 

அதிபர் மற்றும் ஆசிரியர் செயலாற்றுகைத் தரங்கணிப்பு தொடர்பான மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் பிற்சோதனைச் செயற்பாடுகள்.

 

அதிபர் மற்றும் ஆசிரியர் மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை செயற்படுத்துதல்.

வலய பரீட்சைச்சபையின் செயலாளராக கடமையாற்றி வலய மட்ட பரீட்சைகளை நடாத்துதல்.

ஓதுக்கப்பட்ட பாடசாலைகளின் வலயத்தின் பிரதிநிதியாக பாடசாலை மேம்பாட்டு திட்டத்திற்கு நிபுணத்துவ வழிகாட்டல் வழங்குதல்.

சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படும் ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்

Zonal Education Office,Vavuniya North © 2022