கல்வி நிர்வாகப் பிரிவு

கல்வி நிர்வாகப் பிரிவில் பின்வரும் விடயங்களுக்காக அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்

1. இடைநிலை மற்றும் உயர்தர பாடசாலைகளுக்கான பாட ஒதுக்கீடு மற்றும் நேரசூசி
2. பாடசாலைக் குழுக்களுக்கான அனுமதி
3. பாடசாலை சுகாதார மேம்பாட்டு நிதிகள் மற்றும் CERC பயன்பாட்டிற்கான அனுமதி
4. கல்விச் சுற்றுலா செல்வதற்கான அனுமதி
5. பாடசாலைகளில் நடைபெறும் வைபவங்களுக்கான அனுமதி
6. பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலை வளங்களை தனியார் பயன்னடுத்துவதற்கான அனுமதி

கல்வி நிர்வாக பிரிவின் பணிகள் சில

கீழ்தரப்படும் கல்விக்கொள்கைகள் மற்றும் கலைத்திட்டம் என்பன முறையாக அமுலாக்கப்படுதல் தொடர்பாக பொறுப்பேற்றலும் வகைகூறலும்.


1. முறைசாராக் கல்வி அபிவிருத்தி


2. விசேட கல்வி அபிவிருத்தி


3. 13 வருடக் கல்வி அபிவிருத்தி


4. முன்பள்ளி அபிவிருத்தி


5. பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனையும்


6. நூலக அபிவிருத்தி


7. ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி பாடத்துறைகளுடன் தொடர்புறாத போட்டிகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள்.

ஓதுக்கப்பட்ட பாடப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் செயற்றிட்ட உத்தியோகத்தர்களின் செயலாற்றுகை முன்னேற்ற மீளாய்வு.

 

பாடசாலைகளில் மாணவர் அனுமதிக்கப்படுவதை கண்காணித்தலும் மேற்பார்வை செய்தலும். 

 

பாடசாலைகளின் நேரசூசிகளை அனுமதித்தல்.

 

பாடசாலைப்புல ஒழுக்காற்று மற்றும் நலன்புரி செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

 

பாடசாலை சுகாதார மேம்பாடு, போதைப்பொருள் தடுப்பு, தொற்றுநோய் தடுப்பு செயற்பாடுகளை கண்காணித்தலும் மேற்பார்வை செய்தலும்.

 

பாடசாலைப் போசணை வேலைத்திட்டத்தை செயற்படுத்துதல், உணவக செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.

 

 

வலயக் கல்விப் பணிமனைகளுக்கு ஒப்படைக்கப்படும் ஒழுக்காற்று தொடர்பாக ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளலும் சிபார்சுகளை முன்வைத்தலும்.

 

அரச பொது, நிறுவனப் பரீட்சைகளை ஒழுங்கு செய்தலும் நடாத்துதல்

 

மாணவர் செயலாற்றுகைப் படிவ இரண்டாம் பிரதி வழங்கல், கல்விச் சான்றிதழ்களை உறுதிப்படுத்துதல், மாணவர் அறிமுக அட்டைகளை உறுதிப்படுத்தல்

 

பதில் பாடசாலை நாட்கள் நடாத்துவதை சிபாரிசு செய்தல்.

 

பாடசாலை வளாகம் மற்றும் வளங்களை வெளியார் பயன்படுத்த அனுமதி வழங்கல்

 

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் இணைப்புச் செயற்பாடும் அவற்றின் செயற்பாடுகளைக் கண்காணித்தலும்

இடர் முகாமைத்துவச் செயற்பாடுகளை இணைப்புச் செய்தல்.

 

கல்விச் சுற்றுலா மற்றும் களச்சுற்றுலாவுக்கு அனுமதி வழங்கல்

 

பாடசாலைச் சீருடை மற்றும் மாணவர் பருவ காலச்சீட்டு பெற்றுக் கொடுத்தல்தொடர்பான செயற்பாடுகள்.

தரம் 5 புலமைப் பரிசில் வழங்கும் செயற்பாடுகள்.

 

அனுமதித்த தனியார் பாடசாலைகள், உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளின் நிர்வாகம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 

சமாதானமும், நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல். 

கல்வி நிருவாகப் பிரிவின் செயற்பாடுகளை உள்ளக மதிப்பீட்டுக்கு உட்படுத்தல், அறிக்கைப்படுத்தல் மற்றும் பின்னூட்டல் வழங்குதல்.

 

பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை அமுலாக்கல், தரச்சுட்டிகளைத்தயாரித்தல் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு அதற்கிணங்க செயற்படுதல் ஆகியவற்றுக்கு உதவி புரிதல். 

Zonal Education Office,Vavuniya North © 2022