நிதி முகாமைத்துவப் பிரிவு

பிரிவின் பணிகள் சில

1. வருடாந்த நிதிச் செலவு மதிப்பீடு தயாரித்தலும் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளுதலும்.


2. கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வேதனங்களை வழங்குதல்.


3. மேலதிக நேரக் கொடுப்பனவு, பிரயாணச் செலவு மற்றும் இதர செலவுகள் வழங்கல்.


4. தனியார் பாடசாலை மற்றும் பிரிவேனாகளுக்கு நன்கொடைகளைப் பெற்றுக் கொடுத்தல்.


5. பல்வேறு வேலைத்திட்டங்கள், செயலமர்வுகளுக்கான கொடுப்பனவுகளை
மேற்கொள்ளல்.

6. கணக்குகளை பராமரித்தல், கட்டுப்படுத்துதல், கண்காணித்தல்.


7. நிதி வள முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.


8. புலமைப் பரிசில்கள் வழங்கலும் அது தொடர்பான செயற்பாடுகளும்.


9. நீர், மின்சாரம், வரிகள் மற்றும் தொலைப்பேசி கட்டணங்களைச் செலுத்துதல்.


10. நிதிப்பிரமாணம் 104(3) ற்கு ஏற்ப பொருட்களின் அழிவு மற்றும் இழப்புகள் தொடர்பாக செயற்படுதல். ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளலும் அவ்இழப்பு அனைத்தையும் பதிவளித்தல் கணக்கின் மூலம் அறிக்கைப்படுத்துலும்.

11. கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.


12. பாடசாலைகளில் பொருட்கணக்கெடுப்பை நடத்துதல். பொருளிருப்பை சமப்படுத்துதல், பொருட் பதிவேட்டிலிருந்து நீக்குவதற்கான சிபாரிசுகளை வழங்கல்.


13. பாடசாலைக் கட்டிட நிர்மாணம், திருத்தங்களுக்கான கொடுப்பனவுகளை செய்தல்.


14. சகல கொடுப்பனவுகளும் தொடர்பாக நிதிமுன்னேற்ற ௮றிக்கை சமர்ப்பித்தல்.


15. ஊழியர்களின் முற்பணம் மற்றும் கடன்களை முறையாக வழங்குதல், ஒப்பிடுதல், கட்டுப்பாட்டுக் கணக்கை பராமரித்தல் என்பவற்றை மேற்கொள்ளல்.

16. வருட இறுதி கணக்குகளை தயாரித்தலும் கொடுப்பனவுகளை தீரத்தலும்.


17. பொது வைப்புக் கணக்கை ஒப்பிடுதலும் கட்டுப்பாட்டுக் கணக்கை பராமரித்தலும்.


18. பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களின் நடைமுறைக் கணக்கு அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளலும், மேற்பார்வையும்.


19. அலுவலகத்திலும் பாடசாலைகளிலும் நிதி ஒழுக்காற்றொன்றையும், வெளிப்படைத் தன்மையையும் பேணுவதும் கணக்கீட்டு குறைபாடுகளை இழிவுபடுத்திக் கொள்ளத்தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்.


20. ஓய்வூதிய மானியத்தைப் பெற்றுக் கொடுத்தல்.

21. வங்கிக் கணக்கை பராமரித்தல் தொடர்பான செயற்பாடுகளும், மாதாந்த வங்கிக் கணக்கு இணக்கக்கூற்றைத் தயாரித்தலும்.


22. களஞ்சியப்படுத்தல் சரக்கிருப்புக் கட்டுப்பாடு தொடர்பான செயற்பாடுகள்.


23. வள முகாமைத்துவம் தொடர்பான முறைகேடுகள், ஊழல்களை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்தலும் அதுபற்றிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடங்குதலும்.


24. உள்ளகக் கணக்காய்வு விடயங்களை வலுப்படுத்துதல், கணக்காய்வு விடயங்கள் வினைத்திறனாக கையாளுதல்.


25. நிதிப்பிரிவுடன் தொடர்புடைய செயற்பாடுகளை உள்ளக மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல்.

Zonal Education Office,Vavuniya North © 2022