அனுமதிகள் மற்றும் ஆவணங்கள்

திட்டமிடல் பிரிவு

திட்டமிடல் பிரிவில் பின்வரும் ஆவணங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

  • வருடாந்த அமுலாக்கல் திட்டம்
  • ஐந்தாண்டுத் திட்டம்
  • பாடசாலை வரவு செலவுத்திட்டம்
  • புதிய கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான மற்றும் திருத்த வேலைகளுக்கான அனுமதிகள்
  • SBLEG நிதிப் பயன்பாட்டிற்கான அனுமதி
  • மூலதனப் பொருட் கொள்வனவுகளுக்கான அனுமதி

மூலதனப் பொருட் கொள்வனவுகளுக்கான அனுமதி

• குறித்த நிதியாண்டிற்காக அனுமதிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் பிரதி
• பாடசாலை அபிவிருத்திக் குழுக் கூட்ட அறிக்கை
• பாடசாலை அபிவிருத்திக் கணக்கு மீதி விபரம்
(குறித்த காலப்பகுதி வரையான ஒதுக்கீடுகள் மற்றும் பயன்படுத்தப்படாதுள்ள பழைய நிதி ஒதுக்கீடுகள்)
• கொள்வனவுக் குழு, பெறுகைக்குழுத் தீர்மானக் கூட்ட அறிக்கை

குறிப்பு:-

தங்கள் பாடசாலைக்கான எந்தவொரு பெறுகைச் செயற்பாட்டினையும் மேற்கொள்ளும் போது கல்விஅமைச்சின் 2018.06.22ஆம் திகதியுடைய இலக்கம்26/2018 கொண்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவுரீதியான, கட்டமைப்பு ரீதியான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டல் கைநூலுக்கமைவாகவே உரிய நிதிப்பிரமாணங்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்./

Zonal Education Office,Vavuniya North © 2022