கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் "மாண்புறு மாணவ சமுதாயம்" ஆளுமை மிக்க மாணவர் சமூகத்தினை உருவாக்கும் திறன் விருத்திப்போட்டிகள் - 2023.

அறிமுகம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களது ஆரோக்கியமான சமூகமொன்றினைக் கட்டியெழுப்பும் உயரிய சிந்தனைக்கமைவாக இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வருகை மற்றும் சிந்தனைச் சிதறல்களால் ஆட்கொண்டிருக்கும் எம் மாணவ சமூகத்தினை கலையால் உலகை ஆளலாம் என்னும் உயரிய சக்தியின் மூலம் இளம் சிறார்களை ஆற்றுப்படுத்தி அவர்களது அறிவு, திறன், மனப்பாங்கு என்னும் ஆளுமை விருத்தியினை அதிகரித்து எதிர்காலத்தில் அவர்கள் சமூகத்தின் ஆற்றல்மிகு நற்பிரஜைகளாக மிளிர வைக்கும் கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு. அந்த வகையில் "மாண்புறு மாணவ சமுதாயம்" என்னும் வேலைத்திட்டத்தினூடாக எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகமொன்றினை உருவாக்கும் நோக்கில் மாணவர்களது ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதற்காக பின்வரும் திறன் விருத்தி வெளிப்பாட்டுப் போட்டிகளை வடமாகாண பாடசாலை மாணவர்களிடையே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

போட்டி வகைகள்

1.பேச்சு

2.கட்டுரை

3. சுவரொட்டிச் சித்திரம்

போட்டிப்பிரிவுகள்

1. மத்தியபிரிவு

தரம் 6 தொடக்கம் தரம் 8 வரையிலான மாணவர்கள் பங்கு கொள்ள முடியும்.

2.மேற்பிரிவு

தரம் 9 தொடக்கம் தரம் 11 வரையிலான மாணவர்கள் பங்கு கொள்ள முடியும்.

போட்டி ஒழுங்குகள்

போட்டிகள் யாவம் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என மூன்று மட்டங்களில் நடைபெறும். பிரதேச மட்டப் போட்டிகள் கலாசார உத்தியோகத்தர்களால் பிரதேச ரீதியில் உள்ள பாடசாலைகளில் நடத்தி முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்களது விபரங்களை மாவட்டமட்டப் போட்டிகளுக்காக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்களுக்கு 2023-04-28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைத்தல் வேண்டும். மாவட்டமட்டப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களது விபரங்களை 2023-05-10 ஆம் திகதிக்கு முன்னதாக பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

Zonal Education Office,Vavuniya North © 2022