50 ஆவது பொதுநலவாய அமைப்பு தினத்தையொட்டி ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுரைப் போட்டி - 2023
மேற்படி விடயம் தொடர்பாக மேலதிகச் செயலாளர், கல்விப் பண்புத்தரக் கிளை கல்வி மறுசீரமைப்பு, கல்வி அமைச்சு அவர்களது, ED/01/05/02/03/71 ஆம் திகதிய 28.02.2023 ஆம் திகதிய கடிதம் சார்பாக,
2023 ஆம் ஆண்டில் இடம்பெறும் 50 ஆவது பொதுநலவாய அமைப்புத் தினத்தை நினைவு கூரும் வகையில் பொதுநலவாய அமைப்புச் செயலகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை மட்டத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் கட்டுரைப் போட்டி ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப் போட்டியானது கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகள் என இரு பிரிவுகளின் கீழ் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை மட்டப் போட்டிகள் 2023 மார்ச் 09 ஆம் திகதி சகல பாடசாலைகளிலும் நடாத்தப்பட வேண்டியதுடன் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல போட்டிகள் ஒரே நேரத்திலும் ஆங்கில மொழி மூல போட்டிகள் அதே தினத்தில் வேறு பொருத்தமான நேரத்திலும் தங்கள் வலயப் பாடசாலைகளில் நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், படசாலை மட்டத்தில் போட்டிகள் நடைபெறும் போது புகைப்படங்கள் மற்றும் 5 நிமிடங்களுக்கு மேற்படாத வகையில் வீடியோ ஒன்றினையும் பதிவு செய்து moelanguages@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
