75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணைவாக ஒழுங்கமைப்படும் சுதந்திர தின நினைவூட்டல் வாரம் மற்றும் போட்டித்தொடர்

கல்வி இலக்குகள் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் எதிர்கால குடிமகனை உருவாக்குவதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்குவது காலத்தின் தேவையாகும். 1948 ஆம் வருடம் பெப்ருவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறும் காலப்பகுதியில் சுதந்திர போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களின் ஆய்வினால் மாணவர்களின் அறிவு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டு, 2023 ஆம் வருடத்தில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணைவாக சுதந்திர வாரம் ஒழுங்கமைக்கப்படும்.

குறிக்கோள்கள்
1. இலங்கை சுதந்திரம் அடைவதற்காக இலங்கையர்கள ஒரு இனமாக ஒன்று சேர்ந்து செயல்படுவது தொடர்பான அறிவு மற்றும் அணுகுமுறை வளர்ச்சி
2. அடிமையற்ற இனமாக தனக்கு வழங்கப்படும் பொறுப்புக்கள் தொடர்பாக சுதந்திர போராட்டத்தின் தலைவர்கள் செயற்பட்ட விதத்தை ஆய்வு செய்து அவர்களின் நடத்தையை மதிப்பிடுதல்
3. சுதந்திர போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வீரர்களின் உயர்வான பண்பினை சித்தரிக்க தூண்டுதல்
4. தமது நாட்டை நேசிக்கும் மற்றும் மதிக்கும் எதிர்கால குடிமக்களை உருவாக்கும் திறன்களை விருத்தி செய்தல்
5. தேசிய நல்லிணக்கத்தை வளர்த்தல்
Zonal Education Office,Vavuniya North © 2022