அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச சேவை நிறுவனங்களில் அகற்றப்படும் கடதாசிகளை சேகரித்தல் மற்றும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்

அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடிதம்: 06/22

அரச சேவை நிறுவனங்களில் அகற்றப்படும் கடதாசிகளை சேகரித்தல் மற்றும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்

மேற்படி விடயம் தொடர்பாக, 1992 ஆம் ஆண்டு நிதிப் பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளை திருத்தியமைப்பதற்காக பொது நிதி மற்றும் திறைசேரிச் செயற்பாட்டுச் சுற்றறிக்கைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள 2020.08.08 ஆந் திகதிய பொது நிதிச் சுற்றறிக்கை 01/2020 இன் பால் தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். 02. முழு உரிமையும் அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகக் காணப்படும் வரையறுக்கப்பட்ட நேசிய கடதாசி நிறுவனம் அதன் மூலப்பொருளாக தற்போது கழிவுக் காகிதத்தை மட்டுமே பயன்படுத்துவதனால், அரச நிறுவனங்களின் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள முறைசார்ந்த முறைமைகளுக்கு ஏற்ப அகற்றப்படவுள்ள கடித ஆவணங்கள் மற்றும் காகிதங்களை, மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையின் II ஆம் பகுதியின் 11 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் பால் அவதானம் செலுத்தப்பட்டு வரையறுக்கப்பட்ட தேசிய கடதாசி நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் அறவிட்டுக் கொள்ளும் விதத்தில் அகற்றப்படுதல் வேண்டும்.
ஒப்பம்/எம்.எம்.பி. கே. மாயாதுன்னே
செயலாளர்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
Zonal Education Office,Vavuniya North © 2022