தந்தை செல்வா (மூதறிஞர் சா.ஜே.வே. செல்வநாயகம் Q.C) அவர்களின் 125 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு நடத்தப்படும் திறந்த கட்டுரைப் போட்டி

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையானது கல்வி மற்றும் சமூக மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டு, தந்தை செல்வாவின் விழுமியங்களின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.

தந்தை செல்வா அவர்களின் 125ஆவது ஜெயந்தியை முன்னிட்டு மக்களிடையே தந்தை செல்வா பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்குடன். பாடசாலை மாணவர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் மற்றும் பொது மக்களிடையே கட்டுரைப் போட்டிகளும் நடாத்தி சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

திறந்த கட்டுரைப் போட்டிக்கான விதிமுறைகள்

• 20 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் திறந்த கட்டுரைப் போட்டியில் பங்குபற்றலாம். போட்டியாளர்கள் தமது வயதினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

• கட்டுரைகள் A4 தாள்களில் வரிகளுக்கிடையில் இடைவெளிகளுடன் கணினி அச்சுப் பதிவு செய்து அனுப்புதல் வேண்டும்.

போட்டியாளர்கள் பின்வரும் தலைப்புக்களில் விரும்பிய தலைப்பினை தெரிவு செய்து 400 சொற்களுக்கு குறையாமலும், 500 சொற்களுக்கு மேற்படாமலும் எழுதுதல் வேண்டும்

1. தந்தை செல்வாவின் அரசியல் பயணமும் சமகாலத்தில் அதன் தேவைப்பாடும்.

2. தந்தை செல்வானின் சித்தாந்தமும் இன்றைய தலைமுறையினருக்கான தேவைப்பாடும்.

3. தந்தை செல்வாவின் காந்திய கோட்பாடும் அது பற்றிய சமுதாயச் சிந்தனைகளும்,

கட்டுரைகளை அனுப்புபவர்கள் தங்களது முழுப் பெயரினை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுமாறு வேண்டப்படுவதுடன் அறக்கட்டளையானது போட்டியாளர்களை தொடர்புகொள்வதற்கு உதவியாக தமது முகவரியினையும் தொலைபேசி இலக்கத்தினையும் தவறாது அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை,

தந்தை செல்வா கலையரங்கம்,

14,ராஜேந்திர பிரசாத் வீதி, யாழ்ப்பாணம்.

கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சி.கமலகாந்தன்- 077 4687069 இணைப்பாளர் தந்தை செல்வா ஜெயந்தி ஏற்பாட்டுக் குழு, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை.
Zonal Education Office,Vavuniya North © 2022