எமது வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பின்வரும் பாடசாலைகளில் குறித்த தினங்களில் அதிபர் பதவி வெற்றிடம் ஏற்படவுள்ளது.
எனவே, மேற்படி பாடசாலைகளின் அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு பொருத்தமான இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அதிபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
தங்கள் வலயப் பாடசாலைகளிலுள்ள பொருத்தமான தகைமையுடைய இலங்கை அதிபர் சேவையினைச் சேர்ந்தவர்களுக்கு இவ் அறிவித்தலினை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
விண்ணப்பங்கள் யாவும் வடக்கு மாகாணக் கல்வி அமைச்கர் செயலாளரினால் 2022.01.20ஆம் திகதி வெளியிடப்பட்ட “அதிபர் பதவி வெற்றிடம் நிரப்புதல்" சுற்றுநிருப இலக்கம் 2022/01 இற்கு அமைவாக ஏற்றுக் கொள்ளப்படும்.