இலங்கை ஆசிரியர் சேவையிலிருந்து இலங்கை அதிபர் சேவைக்கு விடுவிப்பு பெறுவதற்கான அறிவுறுத்தல்களும், சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களும்
இலங்கை ஆசிரியர் சேவையில் கடமையாற்றி 2016 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது குறித்த சேவையில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர்கள் தாம் முன்னர் கடமையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவையிலிருந்து விடுவிப்பு பெறுதல் அவசியமாகும். எனவே, குறித்த ஆண்டின் பின்னர் இலங்கை அதிபர் சேவைக்கு நியமனம் கிடைக்கப் பெற்று இதுவரை இலங்கை ஆசிரியர் சேவையிலிருந்து விடுவிப்பு பெறாத உத்தியோகத்தர்கள் பின்வரும் ஆவணங்களுடன் தங்களின் கோரிக்கைக் கடிதத்தினையும் இணைத்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
1. உத்தியோகத்தரின் கோரிக்கைக் கடிதம் (இணைப்பு 01 இற்கமைய)
2. விடுவிப்பிற்குரிய பின்னிணைப்பு 10 இன் 143ஆம் பிரிவு
3. இலங்கை ஆசிரியர் சேவை நியமனக்கடிதப்பிரதி
4. ஆசிரியர் சேவையில் பதவியில் உறுதிப்படுத்திய கடிதப்பிரதி
5. இலங்கை ஆசிரியர் சேவையில் இறுதியாகக் கடமையாற்றிய பாடசாலையில் பொறுப்புக்களை ஒப்படைத்தமைக்கான கடிதப்பிரதி
6. இலங்கை அதிபர் சேவை நியமனக் கடிதப்பிரதி
7. இலங்கை அதிபர் சேவையில் கடமையேற்ற கடிதப்பிரதி
8. இலங்கை அதிபர் சேவையில் கடமையேற்ற சம்பவத்திரட்டு பிரதி
9. இலங்கை அதிபர் சேவை முன்சேவைப் பயிற்சிச் சான்றிதழின் பிரதி
10.தேசிய அடையாள அட்டையின் பிரதி
11 பிறப்புச் சான்றிதழின் பிரதி
மேற்படி ஆவணங்களினை தமது கோட்டக் கல்வி அதிகாரியினூடாக இரு பிரதிகளில் சமர்ப்பித்தல் அவசியமாகும்.