Yarl geek challenge junior 12 வலய மட்ட மதிப்பீடு 19.06.2023 ஞாயிற்றுக்கிழமை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் Yarl IT Hub உத்தியோகத்தர்கள் மதிப்பீட்டாளர்களாக கடமையாற்றினர். மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பிற்காக எமது வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் அவர்களும், எமது வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரிய ஆலோசகர் திரு.S.சிவராஜா அவர்களும் ஓமந்தை மத்தியகல்லூரி அதிபர் மற்றும் ஆசிரியர்களும், தகவல் தொழிநுட்ப பாட ஆசிரியர்கள், பங்குபற்றிய பாடசாலைகளின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கு வலயம் சார்பான வாழ்த்துக்கள்