அதிஷ்டலாப சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் முன்பள்ளி பிள்ளைகளுக்கான சத்துணவு வழங்கும் திடடத்தின், புரிந்துணர்வு ஒப்பந்தம்

அதிஷ்டலாப சீட்டிழுப்பு திட்டத்தின் மூலம் முன்பள்ளி பிள்ளைகளுக்கான சத்துணவு வழங்கும் திடடத்தின், புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்றைய தினம் (14.06.2023) வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து வவுனியா மாவட்ட செயலாளர் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்று கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வவுனியா வடக்கு வலய கல்வி பணிப்பாளர் மற்றும் புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய நிர்வாக சபை தலைவர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா வடக்கு உதவி கல்வி பணிப்பாளர் -முன்பள்ளி, வவுனியா வடக்கு பிரதேச சபை செயலாளர், நாகதம்பிரான் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Zonal Education Office,Vavuniya North © 2022