திறன் வகுப்பறைகள் உத்தியோகபூர்வக்கையளிப்பு

வவுனியா வடக்கு கல்வி வலயத்தை சேர்ந்த 12 பாடசாலைகளுக்கு IMHO (International Medical Health Organization) மற்றும் Ratnam Foundation, பிரதேச நன்கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டுப்பங்களிப்பில் IMHO இனுடைய இணைப்புச்செயலாற்றுகையில் இன்று திறன் வகுப்பறைகள் தாபிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

இப்பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிகளும் இன்று ஆரம்பமாகின.

எமது பிள்ளைகளும் தொழினுட்பங்கள் ஊடான கல்வியுலகில் கால் வைப்பதற்கு ஏற்ற திறன் வகுப்பறைகளை வழங்கிய நன்கொடையாளர்களுக்கும், இவற்றை ஒருங்கிணைத்து, தாபித்து, பயிற்சி வழங்கும் IMHO நிறுவனத்திற்கும், அதன் இலங்கை வதிவிடப்பணிப்பாளர் திரு சு.கிருஸ்ணகுமார் அவர்களுக்கும், எமது வலயம் சார்பில் இணைப்புச்செயலாற்றி மிகத்திறம்பட இவற்றை நிறைவேற்றிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப ஆசிரிய ஆலோசகர் திரு சிவராஜா அவர்களுக்கும் எமது நன்றிகள்.

Zonal Education Office,Vavuniya North © 2022