தரம் 1 மாணவர்களுக்கான செயற்பாட்டின் அடிப்படையிலான வாய்மொழிமூலமான ஆங்கிலம் (Activity Based Oral English - "ABOE ") அறிமுகம் செய்யும் வலய மட்டத்திலான நிகழ்வு

நேற்றைய தினம் (30.03.2023) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் வாய்மொழிமூல ஆங்கில மொழியை விருத்தி செய்யும் நோக்கில் தேசிய கல்வி அமைச்சின் நிகழ்ச்சி நிரலின் கீழ் மாகாண கல்வி அமைச்சின் வழிகாட்டலில் அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களின் நெறிப்படுத்தலில் தரம் 1 மாணவர்களுக்கான செயற்பாட்டின் அடிப்படையிலான வாய்மொழிமூலமான ஆங்கிலம் (Activity Based Oral English - "ABOE ") அறிமுகம் செய்யும் வலய மட்டத்திலான நிகழ்வு வவுனியா வடக்கு கல்விப் பணிப்பாளர் திரு.து.லெனின் அறிவழகனின் தலைமையில் வ/தரணிக்குளம் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது . இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான திரு.கு. திலீபன் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Zonal Education Office,Vavuniya North © 2022