மாணவருக்கான இலவச பேருந்து சேவை ஆரம்பம்

ஊஞ்சல்கட்டி, வெடிவைத்தகல்லு, பட்டிக்குடியிருப்பு, காஞ்சிரமோட்டை, கற்குளம், பட்டடைபிரிந்தகுளம், மருதோடை போன்ற பிரதேசங்களிலிருந்து ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயம், நெடுங்கேணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை தரும் 83 மாணவர்கள் நீண்ட காலமாக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்தனர்.

தற்போது நலன்விரும்பிகளின் நிதியீட்டத்தில் வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினுடைய பேருந்து ஒன்று பாடசாலைச்சேவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரது இணைச்செயலாற்றுகையில் இச்சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை சாத்தியமாக்குவதற்கு மும்முரமாக உழைத்த எமது வலயக்கல்விப்பணிப்பாளர் திரு. லெனின் அறிவழகன் அவர்களுககும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு பிரதாபன் அவர்களுக்கும் அவர்தம் அணியினருக்கும், வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினருக்கும், நிதி வழங்கும் நல்லுள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Zonal Education Office,Vavuniya North © 2022