வவுனியா வடக்கு வலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆசிரியர்களும் இலங்கை பாராளுமன்றத்தினை பார்வையிடல்.

வவுனியா வடக்கு வலயத்தின் ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 2 மாணவர்களும், ஆசிரியரும் என்றவாறு உருவாக்கப்பட்ட வலய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 06.12.2022 அன்று இலங்கைப் பாராளுமன்றத்தினை பார்வையிட சென்றிருந்தனர். வலய சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகர் திரு சஜித்குமார், திரு அமலேஸ்வரன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களது ஏற்பாட்டில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் செல்வி லதாங்கி அவர்களின் வழிப்படுத்தலில் எமது பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இவ்வாய்ப்பு எட்டியிருந்தது.

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் (பாராளுமன்ற உறுப்பினர்) ஐயா, கௌரவ காதர் மஸ்தான் (பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர்) ஐயா அவர்களது அனுசரணையும் இம்மாணவர்களுக்கு இவ்வாய்ப்புக்கு உறுதுணையாக அமைந்திருந்தன. தங்குமிடங்களை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர், இராமநாதன் இந்துமகளிர் அதிபர் ஆகியோர் ஏற்பாடு செய்து உதவியிருந்தனர்.

மாணவர்களும், ஆசிரியர்களும் பின்வரும் இடங்களை தரிசித்திருந்தனர்

1. அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் கல்லூரி
2. நுரைச்சோலை அனல்மின் நிலையமும் தொழிற்பாடும்
3. இலங்கைப் பாராளுமன்றம், வரவு செலவுத்திட்ட விவாதம்
4. தாமரைக்கோபுரம்
5. துறைமுக நகரை அண்டிய பகுதிகள்
6. வழிகளிலுள்ள முக்கிய அறிவார்ந்த, வரலாறடிப்படையான இடங்கள்.

எமது மாணவருக்கான இவ்வாய்ப்புக்களுக்கான அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

Zonal Education Office,Vavuniya North © 2022