வ/தவசியாகுளம் அ.த.க.பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கற்றல் சூழலை (Learning Environment) மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு செ.யேசுநேசன் அவர்களின் தலைமையில் (11.10.2022) இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு து.லெனின் அறிவழகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி பராசக்தி கணேசலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்களான திரு கை.பார்த்தசாரதி (ஓய்வுநிலை) திரு ச.நித்தியானந்தம் (ஓய்வுநிலை) திரு இ.லிங்கநாதன் (அதிபர் தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் வலயக்கல்வி அலுவலக கல்விசார் உத்தியோகத்தர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், பெற்றார், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Zonal Education Office,Vavuniya North © 2022